• English
  • Indonesia
  • Русский
  • العربية
  • नेपाली
  • हिन्दी
  • தமிழ்
  • ไทย
  • 中文

1. நல்வரவு

வணக்கம்!
Asia Feminist LBQ Network (AFLN) ஆல் நியமிக்கப்பட்ட இந்த முக்கியமான ஆய்வில் பங்குகொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள LBQ+ செயல்முனைவுகளுக்கு தற்போது என்ன நிதியுதவி உள்ளது மற்றும் LBQ+ இயக்கங்களின் நிதித் தேவைகள் என்ன என்பதைப் பற்றி மேலும் அறிய இந்த ஆய்வு நோக்கம் கொண்டுள்ளது. நிதி வழங்குபவர்கள் மற்றும் இயக்க ஆதரவு நிறுவனங்களுக்கு இந்த ஆய்வின் வழியாக குறிப்பிட்ட பரிந்துரைகள் வழங்குவது மூலம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள LBQ+ ஆர்வலர்களுக்கு இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சிறந்த வளமாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
இந்த மதிப்பாய்வு 20-30 நிமிடங்களுக்கு மேல் எடுக்காது என்று நம்புகிறோம்
இந்த மதிப்பாய்வை முடிந்தவரை பல பிராந்திய மொழிகளில் வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது தற்போது ஆங்கிலம் மற்றும் 8 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது: ஆங்கிலம், அரபு, பாரம்பரிய சீனம், ரஷியன், தாய், இந்தோனேஷியா பஹாசா, தமிழ், நேபாளி மற்றும் ஹிந்தி.

இந்த மதிப்பாய்வு யாருக்கானது?
இந்த மதிப்பாய்வு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள LBQ+ மக்களின் உரிமைகளுக்காக பணிபுரியும் ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்களுக்கானது*. LBQ+ நபர்களால் தலைமை தாங்கப்படாத மற்றும் வேறு பிரச்சனைகளை மற்றும் அடையாளங்கள் கொண்டோரை நோக்கி பணிபுரியும் குழுக்கள், ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள LBQ+ நபர்களின் உரிமைகளுக்காக குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மற்றும் திட்டங்களைக் கொண்டு இருந்தால், உங்களையும் இந்த மதிப்பாய்வை பூர்த்தி செய்ய நாங்கள் அழைக்கிறோம்.
*LBQ+ ஆர்வலர்கள் மற்றும் குழுக்கள் என நாங்கள் கருதுவது என்னவெனில், பெண் தன்பாலீர்ப்பாளர், இருபால் அல்லது பால்புதுமை பெண்கள், திருநங்கையினர், இடைப்பால் பெண்கள், வேறுபட்ட பால்நிலை அடையாளங்கனை கொண்ட பெண்கள் எனும் அடையாளங்களை கொண்ட தனிப்பட்ட ஆர்வலர்கள் அல்லது இவ்வாறான நபர்களால் தலைமைதாங்கப்படும் அமைப்புகள் ஆகும். இவ்வாறான ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள், பெண் தன்பாலீர்ப்பாளர், இருபால் அல்லது பால்புதுமை பெண்கள், திருநங்கையினர், இடைப்பால் பெண்கள், வேறுபட்ட பால்நிலை அடையாளங்கனை கொண்ட பெண்கள் போன்றோரின் உரிமைகளை மேம்படுத்த வெளிப்படையான நோக்கத்தை கொண்டிருப்பார்கள்.

நாங்கள் ஆசியா எனக் குறிப்பிடுவது: கிழக்காசியா, தென்கிழக்காசியா, தெற்காசியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் பசிபிக் உட்பட ஆசியாவின் விரிவான புவியியல் வரையறைக்குள் அடங்கும் பிராந்தியங்களாகும்.
குழுக்கள் முறைசாரா அமைப்புகளாக அல்லது வலையமைப்புகளாக மற்றும் நிறுவப்பட்ட அமைப்புகளாக இருக்கலாம். இந்த மதிப்பாய்வில் பங்கேற்க நீங்கள் முறையாகப் பதிவு செய்த ஒரு நிறுவனமாக இருக்க வேண்டியதில்லை.

இந்த மதிப்பாய்வைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்கள் குழுவை தொடர்பு கொள்ளவும்: lbqap@proton.me

T