Welcome to My Survey

குழந்தை மற்றும் இளையோர் மனநலத்திற்கான ஒன்ராறியோ கூட்டமைப்பானது (The Ontario Coalition for Children and Youth Mental Health) கல்வி, மன ஆரோக்கியம் மற்றும் அடிமையாதல், சுகாதாரம், பொதுச் சுகாதாரம், நீதி, சமூக மற்றும் சமூகசேவைகள் மற்றும் பெற்றோர்/பராமரிப்பாளர்கள் மற்றும் இளையோருடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மாகாணப் பங்காளர்களின் பல்-துறை வலையமைப்பாகும். ஒன்ராறியோவின் குழந்தை, இளையோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குச் சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்வதில் அதன் உறுப்பினர்கள் ஆர்வத்தைக் காட்டுகின்றனர். பெற்றோர்/பராமரிப்பாளர்களிடையே மனநல அறிவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட கருவிகள் மற்றும் வளங்களை உருவாக்கப் பல குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர். இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம், குழந்தைகளின் மன ஆரோக்கியம் பற்றிய தகவல்களை எவ்வாறு சிறப்பாகப் பகிர்வது என்பது குறித்த உங்கள் விருப்பங்கள் மற்றும் ஆர்வமுள்ள தலைப்புகள் பற்றி மேலும் அறியலாமென நாம் நம்புகிறோம். இது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆதார வளங்களை உருவாக்க எமக்கு உதவும், மேலும் எங்கள் பாடசாலைச் சபை பங்காளர்களுடன் இணைந்து அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்தக் கருத்துக் கணிப்பைப் பூர்த்திசெய்வது தன்னார்வமானது என்பதுடன், உங்களது பதில்கள் அநாமதேயமானது என்பதையும் தயவுசெய்து தெரிந்துகொள்ளவும். உங்களது பெயரை நாம் கேட்கமாட்டோம் மற்றும் முடிவுகள் குறிப்பிட்ட ஒரு பதிலளிப்பவருடன் இணைக்கப்பட மாட்டாது. இந்தக் கருத்துக் கணிப்பைப் பூர்த்திசெய்வதற்கு 15-20 நிமிடங்கள் வரை எடுக்குமென நாம் எதிர்பார்க்கிறோம்.

இந்தக் கருத்துக் கணிப்புத் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது கரிசனைகள் இருந்தால், அல்லது கருத்துக் கணிப்பைப் பூர்த்திசெய்வதற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து CoalitionSurvey@opsba.orgஐத் தொடர்புகொள்ளவும். குழந்தைகள் மற்றும் இளையோர் பாடசாலைகளில், வீட்டில் அல்லது சமூகத்தில் செழிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம், அவ்வாறு செய்வதற்கு அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்பன மிக முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். இந்தக் கருத்துக்கணிப்பைப் பூர்த்தி செய்வதன் மூலம், ஒன்ராறியோவின் பெற்றோர்/பராமரிப்பாளர்களான உங்களுக்கான சரியான வளங்களை உருவாக்குவதற்கு, கூட்டணியான எங்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.


Ontario Coalition for Children and Youth ஐப் பற்றி மேலும் அறிக.

மனநல நிபுணர்களைப் பற்றி மேலும் இங்கே அறிக: Mental Health Professionals in Ontario

Question Title

* 1. ஒன்ராறியோப் பாடசாலைகளினூடாக மனநல ஆரோக்கியக் கல்வியறிவை விரிவுபடுத்துவது தொடர்பான வள மேம்பாடு குறித்துத் தெரிவிப்பதற்காக, இந்தக் கருத்துக் கணிப்பைப் பூர்த்தி செய்தவதுடன், எனது பதில்களைப் பதிவுசெய்து கூட்டணியின் உறுப்பினர்களுடன் பகிர்வதற்கு நான் சம்மதிக்கிறேன்.

T