Understanding Gender and Safety at Workplace: Media and Entertainment Industry (Tamil)
UNDP B+HR ஆசியா, ஆசியாவில் - ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் மகளிர் தங்கள் “பணித்தளத்தில் சந்திக்க நேரிடும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆற்றப்படும் பதில்/எதிர் வினையின் செயல்திறன்” குறித்த ஆய்வைச் செய்வதற்காக GWCL ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு, 2016ல் நிறுவப்பட்ட சமூக நிறுவனமாகிய GWCL, நிறுவனங்கள், பிரிவுகள், துறைகள் மற்றும் திட்டங்களில் பாலின சமத்துவத்தை நிறுவி முன்னெடுக்கும்வகையில் பணியாற்றுகிறது. மகளிர் உரிமை அமைப்புகளுடனும், பொதுசமூகத்துடனும், வர்த்தக கூட்டமைப்புகளுடனும், வணிக-வியாபாரங்களுடனும் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுடனும் இணைந்து GWCL இயங்குகிறது. பிற ஒத்துழைப்புகளுக்கு மத்தியில், நாங்கள் UNI யின் ஊடக-பொழுதுபோக்கு மற்றும் கலைப் பிரிவின் (நிரந்தரப் பணியாளர்கள், கட்டுப்பாடற்ற பொதுப் பணியாளர்கள், சுயாதீனப் பணிபுரிவோர் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள்) ஊழியர்களுக்கான UNI UNIMEI –உடனும் இணைந்துள்ளோம். இந்தக் கூட்டிணைப்பு பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் எங்களது ஆராய்ச்சி முயற்சிகளை வலுப்படுத்துகிறது
ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பாலியல் துன்புறுத்தல் என்பது நீண்டகாலமாக இருந்து வருகிற ஒரு பிரச்சினை. இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. 2017 இல் ‘மீடூ இயக்கம்’ இதன் வேகத்தை அதிகரித்தது, குறிப்பாக ஊடக _ பொழுதுபோக்குத் துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலின் பரவலை எடுத்துக்காட்டியது. SHW சம்பவங்களைக் குறித்துப் பேசவும், புகாரளிக்கவும் தேவையான வழிமுறைகளை மேம்படுத்தவும், அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான சீர்திருத்தங்களை தொழில்துறையில் உருவாக்கவேண்டிய கட்டாயத்தையும், அதிகமான பொறுப்பேற்பையும் குறித்து உலகளவில், இது பொதுவெளியில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது.
இந்தியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பணிபுரியும் - பெண்கள் மற்றும் பெண்களாக அடையாளப்படுத்துபவர்களிடம் இருந்து பதில்களைச் சேகரிப்பதே இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் ஆகும். ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் பாலியல் துன்புறுத்தல் வகைகள் மற்றும் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பாலியல்ரீதியிலான பாகுபாடுகள் பற்றிய தகவல்கள், பிரச்சினைகள், அவற்றை எதிர்கொள்ளும் தன்மையின் செயல்திறனை மதிப்பிடுதல் போன்றவற்றைத் திரட்டுதலே இந்த ஆய்வின் பயன் ஆகும். ஆய்வின் மூலம் கண்டறியப்படும் விடைகள்/விளைவுகள் ஊடக-பொழுபோக்குத்துறையில் பாதுகாப்பானதும், மரியாதைக்குரியதும், தங்களை உள்ளடக்கியதுமான பாலின சமத்துவச் சூழலை உருவாக்கத் தேவையானவற்றைப் பரிந்துரைக்கும்.
இந்தக் கருத்துக்கணிப்பில் நீங்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் மிகவும் ரகசியமாகக் கையாளப்படும் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.இந்தக் கணக்கெடுப்பில் பதிலளிப்பவர்களின் அடையாளங்கள் எந்தவகையிலும் வெளியில் தெரிவிக்கப்படாது. சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொழில் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த கருத்துக்கணிப்பை நிரப்புவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. இந்த முயற்சிக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.